Running News

Monday 31 October 2016

GDS ஊழியர்கள் போனஸ் 7000/ எப்படி வந்தது??


GDS ஊழியர்கள் போனஸ் 7000/
எப்படி வந்தது??
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொது செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.

1.4.2014 முதல் அனத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு 3500 ல் இருந்து 7000 மாக 29.8.2016 ல் மத்திய அரசால் உத்திரவு வெளியிடப்பட்டது. அதற்கான நிலுவைத் தொகை 7000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அஞ்சல் வாரியம் இந்த உயர்த்தப்பட்ட போனஸ் உச்சவரம்பு உத்திரவை GDS ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்து விட்டு, GDS ஊதியக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பிவிட்டது.

இதற்கு முன் நடராஜமூர்த்தி கமிட்டி, GDS ஊழியர்களின் உற்பத்தி திறன் 50% மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு 3500 ல் பாதி 1750 மட்டும் போனஸாக வழங்கினால் போதும் என்று பரிந்துரை வழங்கியது. இதற்கு எதிராக அப்பொழுது NFPE மற்றும்  AIPEU-GDS அமைப்புகள் FNPO மற்றும் NUGDS அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அப்போதைய துறை அமைச்சரோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அமைச்சரின் சாதகமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் GDS ஊழியர்களுக்கு 3500 போனஸை மூன்று முறை மறுத்து 2500 வழங்கியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்புதான் நிதியமைச்சகம் 3500 போனஸை ஏற்றுக்கொண்டு வழங்கியது.

இந்த முறை கமலேஷ் சந்திரா குழுவின் மாறுபட்ட நிலை:
இந்த முறை GDS குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா  உயர்த்தப்பட்ட 7000 ரூபாய் போனஸை GDS ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்தது.

"GDS ஊழியர்களால் நடத்தப்படும் அலுவலகங்களில் வருமானமும் செலவும் சமமாக உள்ளது. அஞ்சல் துறையின் மொத்த பற்றாக்குறை ரூபாய் 6000 கோடியாக உள்ளது. ஆனால் GDS ஊழியர்களால் பற்றாக்குறை என்பது 200 கோடி மட்டுமே. அஞ்சல் RMS அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை பார்க்கும் பொழுது GDS ஊழியர்களின் வருவாய் பற்றாக்குறை என்பது மிகவும் குறைவானதே என்று எடுத்துக்காட்டிய பின், GDS போனஸ் கோப்பு அஞ்சல் வாரியத்தால் நிதியமைச்சகத்திற்க்கு அனுப்பப்பட்டது.  விரிவான ஆய்விற்க்குப்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அஞ்சல்துறையால் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு 7000 போனஸ் உத்திரவு வெளியிடப்பட்டது.

NFPE மற்றும் AIPEU-GDS சங்கங்களின் பங்களிப்பு:
NFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலாளர் தோழர் RN.பராசர் மற்றும் AIPEU-GDS-NFPE பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரெங்கராவ் இணைந்து FNPO மற்றும் NUGDS அமைப்புகளை இணைத்துக் கொண்டு GDS ஊழியர்களுக்கு எதிராக போனஸ் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், அனைத்து கேசுவல் மற்றும் பகுதிநேர, கண்டிஜன்ட் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் பல இயக்கங்களுக்கு அறைகூவல் விட்டன. கோட்ட, மண்டல, மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டது. நவம்பர் 3 2016 முதல் டெல்லி தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், நவம்பர் 9 மற்றும் 10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீசும் அஞ்சல் துறை செயலரிடம் 20.10.16 அன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலைநிறுத்த பிரச்சார இயக்கத்திற்கு ஊழியர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது.

இலாகா - GDS - ஊழியர் ஒற்றுமை .. உடைக்க முடியாத ஒற்றுமையை ஏற்படுத்திய தோழர் ஆதி:
ED ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்ற ஒரே கோரிக்கை வைத்து 1984 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோழர் ஆதிநாராயணா அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார்கள். 32 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் NFPE, AIPEU-GDS மற்றும் FNPO,NUGDS அமைப்புகள் இணைந்து GDS மற்றும் கேசுவல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நவம்பர் -9,10 -2016 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
NFPE மற்றும் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு எப்பொழுதும் GDS மற்றும் கேசுவல் ஊழியர்களை விட்டுக் கொடுக்காது, அவர்களும் அஞ்சல் குடும்ப உறுப்பினர்கள் என்பதை இப்பொழுதும் நிரூபித்துள்ளோம். இந்த உறுதியான தொழிலாளிவர்க்க நிலைபாட்டை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ, திரித்துக் கூறவோ முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட  GDS சங்கத்தின் நிலை என்ன??
NFPE சங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுப்பதை விமர்சனம் செய்யும் திரு மகாதேவைய்யா அவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மட்டுமே நம்புவதாக கூறும் அவர் இந்த முறை 25,26 - 10 -2016 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது மட்டுமல்ல அதற்கான பிரச்சாரமும் செய்யாமல், போனஸ் உத்திரவு வராமலே திடீரென 24.10.2016 அன்றே வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது எதற்கு என்ற கேள்வியை GDS ஊழியர்கள் கேட்கிறார்கள். அங்கீகாரம் ரத்தாகிவிடும் என்கிற அமைச்சகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு GDS ஊழியர்கள் கோரிக்கைகளை விலையாக கொடுத்து விட்டார். திரு மகாதேவைய்யா அவர்கள் GDS ஊழியர்களை சில காலம் ஏமாற்றலாம், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழியர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

NFPE, AIPEU-GDS மற்றும் PJCA நிலைபாடு:
திரு மகாதேவையாவுக்கு வந்த அதே மிரட்டல் NFPE/AIPEU-GDS மற்றும் PJCA வுக்கு வந்தாலும், GDS மற்றும் கேசுவல் ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நவம்பர் 9,10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தே தீரூம் என்ற உறுதியான நிலைபாட்டை PJCA எடுத்ததின் காரணமாகத்தான் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு,  உயர்த்தப்பட்ட 7000 போனஸ் உத்திரவும், கேசுவல் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் புதிய ஊதியம் வழங்கிடும் உத்திரவு இதற்கு முன்பே வந்தாலும், இந்த உத்திரவை அமுல்படுத்தாத அனைத்து மாநில CPMG களும் கறாராக அமுல்படுத்திட மீண்டும் கடிதம் அனுப்பிட இலாக்கா ஏற்றுக் கொண்டது.

GDS-ஊதியக்குழுவும் - NFPE/AIPEU-GDS பங்களிப்பும் :
        NFPE மற்றும் AIPEU-GDS அமைப்பும் GDS ஊதியகுழுவிடம்விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை கொடுத்துள்ளது.  இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழு GDS ஊதியகுழுத்தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து நேரடி சாட்சியம் அளித்துள்ளது. அரசு ஊழியர் அந்தஸ்தும், இலாக்கா ஊழியருக்கு இணையான சலுகைகளும் உரிமைகளும் GDS ஊழியருக்கு தரப்பட வேண்டும் என்பதே நம் முக்கிய கோரிக்கை.  GDS ஊதிய குழு நவம்பர் 2016 ல் பரிந்துரைகளை வழங்குவதாக கூறியுள்ளது.  பரிந்துரைகள் GDS ஊழியருக்கு எதிராக இருக்குமானால் NFPE, AIPEU-GDS மற்றும் அஞ்சல் கூட்டு போராட்ட குழுவோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலபோராட்டங்களை  நடத்திடும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக GDS  ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத திரு மகாதேவய்யா அவர்கள் GDS ஊழியர்களின் எதிரி இலாக்கா ஊழியர்கள் என்று சித்தரித்து அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார்.  இச்செயல் மற்ற பல மத்திய அரசு ஊழியர்கள் அமைப்போடு இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எதிரானது.

இத்தகைய சூழலில் ஒவ்வொரு GDS ஊழியரும்
AIPEU-GDS-NFPE அமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.  ஒன்றுபட்ட போராட்டமே GDS ஊழியர்களின் நியாயமான  பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு GDS ஊழியரும் நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்பில் AIPEU-GDS-NFPE அமைப்புக்கு ஆதரவாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளம் மற்றும் JCM (தேசிய குழு - ஊழியர் தரப்பு)  பங்களிப்பும் பாராட்டகூடியது.  25.10.2016 அன்று JCM National council கூட்டத்தில் GDS பிரச்சனையை  அரசுடன் விவாதித்து உடனடி தீர்வு காண  வலிவுறுத்தப்பட்டது. 

NFPE, AIPEU-GDS மற்றும் FNPO, NUGDS உள்ளடக்கிய அஞ்சல் போராட்ட குழுவின் போனஸ் போராட்டம் மாபெரும்   வெற்றியே!!

GDS- இலாக்கா ஊழியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்துவோம்....

இலாக்கா GDS ஊழியர்களின் - அமைப்புகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போர்முரசொலிப்போம்!!  தடைகளை தகர்த்தெறிவோம்.

வெற்றி முரசு கொட்டுவோம்.

புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன்,
G.கண்ணன்,
மாநில செயலாளர்,
AIPEU - PM & MTS,
தமிழ் மாநிலம்.


Thursday 27 October 2016

HAPPY DIWALI



                                                           HAPPY DIWALY





                                                                            KARUR NFPE

TODAY OUR SECRETARY GENERAL MET WITH DG(POSTS), MEMBER (P) AND MEMBER (O) ON SUNDAY/ HOLIDAY DELIVERY DUTY ISSUE

TODAY OUR SECRETARY GENERAL MET WITH DG(POSTS), MEMBER (P) AND MEMBER (O) ON SUNDAY/ HOLIDAY DELIVERY DUTY ISSUE

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் !

நம்முடைய மாநிலச்  சங்கம், நேற்றைய தினம் இரவு மீண்டும்நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலரை தொடர்பு கொண்டு  ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் பட்டுவாடாப் பணிக்கு ஊழியர்களை கொண்டுவரும் உத்திரவை ரத்து செய்திட இலாக்கா முதல்வருடன் உடன் பேசி முடிவு எடுத்திட  வேண்டியது.  

அதற்கான ஆதரவு ஆவணங்களாக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு  2012 இல்  நம்முடைய இலாக்கா அளித்த உறுதி மொழி மற்றும்  அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஞாயிறு, விடுமுறை தினங்களில்  இடப்பட்டு நடைமுறையில் இருந்த SPEED BOOKING மற்றும் DELIVERY ரத்து செய்திட்ட ஆவணங்களை  சம்மேளன மாபொதுச் செயலர் வேண்டியதன் அடிப்படையில் EMAIL  மூலம் 
 நாம் அனுப்பினோம்.

இதன் அடிப்படையில்  இது குறித்து நடைபெற்ற முன்னேற்றங்களை நம்முடைய மாபொதுச் செயலர் இன்று மதியம் தொலைபேசியில் மாநிலத் செயலரிடம் தெரிவித்திட்டார். அதன் விபரம் கீழே பார்க்க :-

இன்று நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலர் DG (POSTS), MEMBER(P) மற்றும் MEMBER (O) ஆகியோரை  நேரில் சந்தித்து இந்த உத்திரவை ரத்து செய்திட வேண்டினார். அதற்கான காரணங்களை விளக்கி உரிய ஆவணங்களையும்  அளித்து   .விவாதித்தார் . அதன் அடிப்படையில் தமிழகத்தில் மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிட அறிவுறுத்துவதாகவும் , இந்த தீபாவளி பண்டிகை  விடுமுறை தினங்களில் பட்டுவாடாவை நிறுத்தி உத்திரவு  விடுவதாகவும்  உறுதி பெறப்பட்டது.

இதற்கான உத்திரவை இன்று மாலைக்குள்  எதிர்பார்க்கலாம். ஒட்டு மொத்தமாக இந்த உத்திரவு ரத்து செய்யப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு  நம்முடைய  மாநிலச்  செயலர் , பொதுச் செயலரை வேண்டியுள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது நம்முடைய மாபொதுச்செயலர்  அளித்த கடிதத்தின் நகல் கீழே காணவும்.

Sunday 23 October 2016

ALLOWANCES................

ALLOWANCES................

      25ம் தேதி  நடைபெற உள்ள allowance comittee meetingல்கீழ் கண்ட allowance -களை தக்க வைத்து கொள்ளலாம் என தெரிகிறது. இலாகா பரிந்துரைக்கும் போது அரசு ஏற்று கொள்ளலாம். 

    A meeting on allowances was held on 19.10.2016 at G.P. Roy Committee Room, Dak Bhawan, New Delhi under the Chairmanship of Shri B.V. Sudhakar, Secretary (Posts). Shri A.K. Dash, Member (P), Shri S.K. Dashora, DDG (Estt) and Director (Estt) were present.

Shri Vilas Ingale General Secretary, Shri P. Ajit Kumar, Asst. General Secretary-I and Shri Arup Seal, Circle Secretary West Bengal Circle attended the meeting. 

Discussion on following allowances to be retained in Department of Posts was held. All the union leaders took active part in the discussion and requested Chairman to recommend retention of following allowances strongly to MoF. The views of Secretary (Posts) were positive on the allowances discussed in the meeting. We hope positive outcome.
1) Fixed Medical Compensation being given to Postman:
It is proposed that suitable increase in the FMC say Rs. 200/- per day for additional beat and Rs. 100/- per day for divided beats and further increase in it by 25% very time when 50% increase in DA. 
2) Special allowance to PO and RMS Accountants :
It is proposed that the allowance is required to be continue with justified increase in the allowance. The allowance be re-notified as per provision laid down in para No. 8.2.5 of the 7CPC report.
3) Cycle Allowance :
It is proposed to retain with doubled the amount. 

4) Cash handling and Treasury Allowance:

It is proposed that cash handling allowance for its staff not only to be retained and also required to be increased proportionately. 
5) Overtime Allowance :
Long discussion held on this issue. Department recommends not only to retain the OTA in Department of Posts but also to increase the OTA to Rs. 100/- per hour and further increase by 25% every time the DA increase by 50%.

6) Saving Bank Allowance in Post Offices :

Department proposes that the Saving Bank Allowance be retained at doubled rate of the present allowance.
7) Family Planning Allowances :
Department proposes that the Family Planning Allowance should not be withdrawn from one already granted.

8) Fixed Medical Allowance :

In the interregnum period, the FMA may be allowed at rate of Rs. 2000/- per month. 
9) Headquarter Allowance :
Department proposes to retain the Headquarters Allowance at the uniform rate of 10% of the basic pay subject to ceiling of Rs. 4000/- per month to all eligible JAG/STS/JTS/AD/AAOs/Sr.AO/ASPs/IPs officers in Department of Posts. 
10) Other Allowances :
a)SplitDutyAllowance : 
For performance of split duty having break of less than 2 hours and residence being beyond 5 KM from duty place. 
b)OutstationDutyAllowance : 
For performance of outstation duties while performing duties on sections
c)NightHaltAllowance : 

In lieu of TA for night halt away from HQ while on their beats in the course of their duty. 

d) Special Allowance : 

( Special Allowance is admissible to DPS posted at Unit HQ at Mumbai, Kolkata, Chennai / JTS officers when posted at HQ / APMG (C), APMG (Planning), APMG (Vig.) in Circle Office/ PS Gr. B officers posted as Administrative Officers at PTCs, Assistant Directors in COS/ROs / PS Gr. B officer posted as Supdt. Seals Aligarh / PS Gr. B officers posted as Lectureres, ASPs in PTCs / LSG Officials employed as instructors in PTCs / Technician in PTCs. / SAs when posted in CO as Stg. Complier / IPs when posted as Platform Inspector / Project Operator Sound / Franking Machine Operator / Photocopier Operator (MTS) / Generator Operator / Clerical and allied cadres working as JA/SA, Pas on passing JAO Part-II Exam but awaiting promotion. 

Department proposes to retain allowances to above posts as arduous nature of duties

Friday 7 October 2016

GDS-கள் கவனதிற்கு………

GDS TO MTS நேரடி தேர்வு /GDS TO ARMY POSTAL SERVICE செல்லதேர்வுகள் அறிவிப்பு   GDS   TO MTS                                 
விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் 24.10.2016
தேர்வு  நடைபெறும்நாள்                            20.11.2016
தகுதி                                                         GDS
(All GDS who are appointed who are appointed on before the date of receipt of application Ie.24.10.2016.)

வயது                                                                  18-50

காலியிடங்கள்  தமிழகம் 61 / தூத்துக்குடி 1 (UR )

GDS TO MTS (APS )  
விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் 24.10.2016
தேர்வு நடைபெறும்நாள்                            20.11.2016

தகுதி      (ஆண்கள் மட்டும்)                    GDS

வயது                                                                  18-30


காலியிடங்கள்  தமிழகம்41/ கரூர்  ONE.